ஊழியர்களுக்கானது

ஊழியர்களுக்கானது

நீங்கள் வேலை செய்யுமிடத்தில் பாதுகாப்பில்லாத விஷயங்கள் எதையும் பார்க்கிறீர்களா? உங்களையும் உங்கள் சக ஊழியர்களையும் பாதுகாத்திட உடனடியாக அவற்றைக் குறித்து புகாரளித்திடுங்கள். இவ்வாறு புகார் செய்வது ஓர் உயிரைக் காப்பாற்றக்கூடும்.

உரிய நேரத்தில் தெரிவிப்பது உயிர்களைக் காக்கும்

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்க கூட்டு முயற்சி தேவை. பாதுகாப்பற்ற சூழ்நிலைகளைப் பற்றி பேசுவதன் மூலம், உங்களுக்கும், சக ஊழியருக்கும் ஏற்படும் காயத்தைத் தடுக்கலாம் அல்லது ஓர் உயிரைக் காப்பாற்றலாம். உங்கள் ஈடுபாடு எல்லா மாற்றத்தையும் கொண்டு வரும். நீங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை இங்கே காண்க:

மேற்பார்வையாளர்கள்

அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பான பணி நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, கருவிப்பெட்டி கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விளக்கங்கள் மூலம் அதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும்.
உங்கள் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறுவனத்திற்குள்ளேயே பாதுகாப்பற்ற சூழ்நிலைகளைப் புகாரளிக்க ஊக்குவிக்கவும்.
அக அறிக்கையிடல் பற்றி மேலும் அறிய,
நியர் மிஸ் புகாருக்கான வழிகாட்டியைப் பார்க்கவும்.
அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பான பணி நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, கருவிப்பெட்டி கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விளக்கங்கள் மூலம் அதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும்.
உங்கள் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறுவனத்திற்குள்ளேயே பாதுகாப்பற்ற சூழ்நிலைகளைப் புகாரளிக்க ஊக்குவிக்கவும்.
அக அறிக்கையிடல் பற்றி மேலும் அறிய, நியர் மிஸ் புகாருக்கான வழிகாட்டியைப் பார்க்கவும்.

தொழிலாளர்கள்

பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்றவும்.
குறுக்குவழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது விபத்துக்களை விளைவிக்கும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையைச் சரிசெய்வது அல்லது கையாள்வது பாதுகாப்பானது என்றால் மட்டும் மேற்கொள்ளவும்.
நீங்கள் பார்க்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை அகமுறையில் அல்லது உங்கள் தொழிற்சங்கத் தலைவர் அல்லது மனிதவள அமைச்சிடம் புகாரளிக்கவும்.
பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்றவும்.
குறுக்குவழிகளைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது விபத்துக்களை விளைவிக்கும்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையைச் சரிசெய்வது அல்லது கையாள்வது பாதுகாப்பானது என்றால் மட்டும் மேற்கொள்ளவும்.
நீங்கள் பார்க்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளை அகமுறையில் அல்லது உங்கள் தொழிற்சங்கத் தலைவர் அல்லது மனிதவள அமைச்சிடம் புகாரளிக்கவும்.

புகார் செய்வதற்கான வழிகள்

பாதுகாப்பில்லாத சூழ்நிலைகளைப் பற்றி உங்கள் முதலாளியிடம் புகார் செய்திடுங்கள்.

உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது உங்கள் மேற்பார்வையாளர்களுடைய பொறுப்பு. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் பாதுகாப்பில்லாத செயல்களைக் கண்டால் அவர்களிடம் தெரிவியுங்கள். இது அவர்களின் வணிகம் சீராக நடைபெறுவதற்கும், உங்களுக்கோ உங்கள் சக ஊழியர்களுக்கோ ஏற்படும் காயங்களைத் தடுப்பதற்கும் உதவும்.

பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து உங்கள் தொழிற்சங்கத் தலைவரிடம் புகார் செய்திடுங்கள்.

உங்களது நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர்களிடம் உங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகளைத் தெரிவித்திடவும் நீங்கள் தேர்வு செய்யலாம், அவர்கள் உங்கள் நிறுவனத்துடன் இணைந்துப் பணியாற்றி சிக்கலைத் தீர்ப்பார்கள்.

மனிதவள அமைச்சு (Ministry of Manpower)
அல்லது குடிபெயர்ந்த ஊழியர்கள் மையத்திடம் (Migrant Workers’ Centre)
பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து புகார் செய்திடுங்கள்.

மனிதவள அமைச்சு (Ministry of Manpower) அல்லது குடிபெயர்ந்த ஊழியர்கள் மையத்திடம் (Migrant Workers’ Centre) பாதுகாப்பற்ற நடைமுறைகள் குறித்து புகார் செய்திடுங்கள்.

தேவைப்பட்டால், மனிதவள அமைச்சு (MOM) அல்லது குடிபெயர்ந்த ஊழியர்கள் மையத்திடம் (MWC) பாதுகாப்பற்ற பணி நடைமுறைகள் குறித்து புகாரளிக்கலாம்.
மனிதவள அமைச்சு (MOM) வேலை செய்யுமிடத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, எனவே நீங்கள் தெரிவிக்கும் கருத்து மதிப்புமிக்கது. ஏதேனுமொரு பாதுகாப்பற்ற செயல் குறித்து புகாரளிப்பது உங்களை மட்டுமல்ல, உங்கள் சக ஊழியர்களையும் பாதுகாத்திடும். சரியான நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை காயங்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். புகார் செய்வதன் மூலம் வேலை செய்யுமிடத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக வைத்திருக்கலாம், இன்னும் முக்கியமாக, இவ்வாறு புகார் செய்வது உயிர்களைக் காப்பாற்றலாம்.
உங்கள் அடையாளத்தை உங்கள் முதலாளியிடமோ நிறுவனத்திடமோ நாங்கள் வெளியிடமாட்டோம். உங்களது அடையாளம் இரகசியமாக வைக்கப்படும், மேலும் சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்கள் மட்டுமே விசாரணைக்காக நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

MINISTRY OF MANPOWER

குடிபெயர்ந்த ஊழியர்கள் புகார் செய்திட FWMOMCare செயலியைப் பயன்படுத்தலாம்.
குடிபெயர்ந்த ஊழியர்கள் புகார் செய்திட FWMOMCare app செயலியைப் பயன்படுத்தலாம்.
மனிதவள அமைச்சின் (MOM) உதவி இணைப்பை அழைத்திடுங்கள்:
6317 1111

MIGRANT WORKERS’ CENTRE

குடிபெயர்ந்த ஊழியர்கள் மையம் (MWC) என்பது ஒரு அரசு சாரா நிறுவனமாகும் (NGO), இது சிங்கப்பூரில் குடிபெயர்ந்த ஊழியர்களின் நியாயமான வேலை நடைமுறைகளையும் நல்வாழ்வையும் ஆதரிக்கிறது. நீங்கள் இந்நிறுவனத்தின் இணையத்தளத்தை www.mwc.org.sg என்ற பக்கத்தில் பார்வையிடலாம் அல்லது MWC இன் 24-மணி நேர உதவி இணைப்பை (+65) 6536 2692 என்ற எண்ணில் அழைத்து உங்களது பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து புகார் செய்யலாம்.
You may visit their website at www.mwc.org.sg or call the MWC 24-Hour Helpline: (+65) 6536 2692 to report your unsafe situation.

பாதுகாப்பு குறித்து உண்மையான புகாரைச் சமர்ப்பித்த பிறகு நான் அச்சுறுத்தப்பட்டாலோ வேலைநீக்கம் செய்யப்பட்டாலோ என்ன செய்வது?

பாதுகாப்பு குறித்து உண்மையான புகாரைச்
சமர்ப்பித்த பிறகு நான் அச்சுறுத்தப்பட்டாலோ
வேலைநீக்கம் செய்யப்பட்டாலோ என்ன செய்வது?

பாதுகாப்பு குறித்து உண்மையான புகாரைச் சமர்ப்பித்ததன் காரணமாக, உங்கள் முதலாளி உங்களை அச்சுறுத்தவோ உங்களை வேலையிலிருந்து நீக்கவோ கூடாது. இவ்வாறு செய்யும் முதலாளிகள் மீது மனிதவள அமைச்சு (MOM) நடவடிக்கை எடுக்கும்.
பாதுகாப்பு குறித்து உண்மையான புகாரைச் சமர்ப்பித்த பிறகு அச்சுறுத்தப்பட்ட அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள் முதலாளியை விசாரணை செய்வதற்கும், தேவைப்பட்டால் சிங்கப்பூரில் தொடர்ந்து வேலை செய்வதற்கு முதலாளியை மாற்றுவதற்கும் உதவிக்காக மனிதவள அமைச்சை (MOM) அணுகலாம்.
நீங்கள் அணுகக்கூடியவை:
மனிதவள அமைச்சு (MOM)
6317 1111 என்ற எண்ணில் மனிதவள அமைச்சின் (MOM) உதவி இணைப்பை அழைக்கலாம். குடிபெயர்ந்த ஊழியர்கள், மனிதவள அமைச்சின் (MOM) உதவியைப் பெற FWMOMCare செயலியையும் பயன்படுத்தலாம்.
குடிபெயர்ந்த ஊழியர்கள் மையம்
குடிபெயர்ந்த ஊழியர்கள் மையம் (MWC) என்பது ஒரு அரசு சாரா நிறுவனமாகும் (NGO), இது குடிபெயர்ந்த ஊழியர்களின் நியாயமான வேலை நடைமுறைகளையும் நல்வாழ்வையும் ஆதரிக்கிறது. குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள் சூழ்நிலை குறித்த ஆலோசனையைப் பெற, MWC உடைய 24-மணி நேர உதவி இணைப்பை (+65) 6536 2692 என்ற எண்ணில் அழைக்கலாம்.
உங்களது தொழிற்சங்கத் தலைவர்
உங்களது நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர்களிடம் பேசுங்கள், அவர்கள் உங்கள் நிறுவனத்துடன் இணைந்துப் பணியாற்றி சிக்கலைத் தீர்ப்பார்கள்.

வேலை செய்யுமிடத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, iWSH முகநூல் பக்கத்தில் எங்களைப் பின்தொடருங்கள்.

பாதுகாப்பற்ற நடைமுறை குறித்து எப்படிப் புகார் செய்யலாம் என்பதை உங்கள் சக ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா?

இந்தப் பதாகையைப் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வேலை செய்யுமிடத்தில் சுகாதாரத்துடனும் பாதுகாப்புடனும் இருந்திடுங்கள்